முகப்பு
உலகம்

தொடரும் துயரம்: காஸா

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் சிதைந்துகொண்டிருக்கும் காஸாவின் இன்றைய நிலவரம். 

Updated On : 4 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையான போரில் சிக்கி சிதைந்துகொண்டிருக்கும் காஸாவின் மண்ணில் தினமும் இரத்தம் படிந்துகொண்டுதான் இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் நிம்மதியின்றி தவித்துவருகின்றன அப்பாவி உயிர்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலின் தாக்குதல்களால் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 318 பேர் காயப்பட்டுள்ளனர். 

பெய்ருத் பகுதியில் நடந்த உயிரிழந்த சலே அல் அரூரி-யின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

கான் யூனிஸின் மேற்குப்பகுதியில் இஸ்ரேல் சலாஹ் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின்மீது நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

கடந்த புதன் கிழமை இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை 22,438 பேரை இஸ்ரேல் கொன்றுகுவித்துள்ளது. அதில் 80 சதவீதம் பெண்களும் குழந்தைகளும் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.