வலைதளத்தில் பரவும் நீதிபதி தாக்கப்படும் காணொலி | X 
உலகம்

தீர்ப்பில் திருப்தியில்லை! பெண் நீதிபதி மீது பாய்ந்த குற்றவாளி!

லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு பிடிக்காததால் நீதிபதியின் மீது பாய்ந்து குற்றவாளி தாக்குதல் நடத்தியுள்ளார். 

DIN

லாஸ் வேகாஸ் நகரில் நீதிபதி அளித்த தீர்ப்பு பிடிக்காததால் குற்றவாளி நீதிபதியின் மேல் பாய்ந்து அவரைத் தாக்கும் காணொலி வலைதளத்தில் பரவிவருகிறது. 

டியோபர ரெடென் எனும் 30 வயதான குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருந்தார். அங்கு மாவட்ட நீதிபதி மேரி கே ஹோல்தஸ் அவருக்கு சிறை தண்டனை வழங்குவதாக அறிவித்தபின் வேகமாக நீதிபதிமேடையில் புகுந்து அவர் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.

நீதிபதி தலைக்குப்பற கவிழ்ந்து விழ, அவரைத் தாக்கியுள்ளார். நீதிமன்றக் காவலாளிகள் மற்றும் மற்ற அலுவலர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர் அவரைப் பிடித்தனர்.  

60 வயதான நீதிபதி சில காயங்களுடன் தப்பித்த நிலையில், தடுக்கச் சென்ற நீதிமன்றக் காவலர் ஒருவருக்கு நெற்றியில் பலத்த காயமும், தோல்பட்டை எலும்பு விலகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி ஓ.பன்னீா்செல்வம்

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியா் இடமாற்றம்

சாலைப் பணி ஒப்பந்த நிறுவனத்தில் ரூ.78 லட்சம் கையாடல்

SCROLL FOR NEXT