ஓப்பன் ஏஐ நிறுவனர் சேம் ஆல்ட்மென் மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்ய நடெல்லா 
உலகம்

திருடர்களுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: எழுத்தாளர்கள்

செய்யறிவு தொழில்நுட்பத்திற்கு பயிற்சியளிக்க எழுத்தாளர்களின் அனுமதியின்றி அவர்களது படைப்புகளைப் பயன்படுத்தியதாக இரண்டு பெரிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

DIN

உலகின் முதன்மை செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஓப்பன் ஏஐ, மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது மேலுமொரு திருட்டு குற்றம் பதிவாகியுள்ளது.  எழுத்தாளர்கள் நிக்கோலஸ் பாஸ்பனேஸ் மற்றும் நிக்கோலஸ் கேஜ் ஆகியோரால் இந்த நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தொழில்நுட்பத்திற்கு, மிகப்பெரிய அளவிலான கட்டுரைகள் மற்றும் இதர எழுத்துவடிவிலான தரவுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்யறிவு தொழில்நுட்பம் சிறப்பாக இயங்குகிறது.

அந்த தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்பட்ட தகவல்கள், எழுத்தாளர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டு , இப்போது அந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என மேன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

'திருடர்களுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை' என இரண்டு எழுத்தாளர்களும் தெரிவித்துள்ளனர். தொடரப்பட்ட இந்த வழக்கில் இரண்டு எழுத்தாளர்களுக்கும் நஷ்டஈடாக ஆளுக்கு 150,000 டாலர்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 12,476,470 கோரப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம், 17 அமெரிக்க புனைக்கதையல்லாத எழுத்தாளர்கள், சாட் ஜிபிடி (Chat GPT) மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்ஆர் மார்ட்டினும் அதில் அடங்குவார்.

அவரது எ சாங் ஆப் ஐஸ் அன்ட் ஃபயர் (A song of ice and fire) என்ற புத்தகம் அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது புத்தகம் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of thrones) என்ற தொலைக்காட்சி தொடராக வெளியாக உலகப்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

SCROLL FOR NEXT