அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 
உலகம்

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றுதான்: ஹமாஸ்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கு கடற்கரைக்கு வருவதற்கும் இஸ்ரேல் அந்த பகுதியை ஆக்கிரமித்திருப்பதற்கும் வித்தியாசம் இல்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

DIN

மேற்கு கடற்கரைப் பகுதியின் ரமல்லாவை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இப்போது அங்கு வருவதற்கும் வித்தியாமில்லை என ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹாரி தெரிவித்துள்ளார். 

'ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாப்பதுதான் அவரது வருகையின் நோக்கம். அமெரிக்கர்களுக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசமில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் 'பிளிக்கனின் நிலைப்பாடு, காஸாவில் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் செய்த பெரும் வன்முறைக் குற்றங்களில் அமெரிக்காவிற்கும் பங்குள்ளதைக் காட்டுகிறது' என ஹமாஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'பாலஸ்தீன எதிர்ப்பு மக்களிடம் பரவலாகியுள்ளது எனக் கூறுவது இஸ்ரேல் ராணுவ வீரர்களின் இனப்படுகொலைக் குற்றங்களை நியாயப்படுத்தும் பிளிங்கனின் மோசமான முயற்சிகளாகும்' என ஹமாஸ் கூறுகிறது.  

குற்றம் செய்தவர்களின் கையிலுள்ள ரத்தக்கரைகளை நீக்க பிளிங்கன் முயற்சிக்கிறார் என அந்த அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT