முகப்பு
உலகம்

ஆப்கனில் தொடரும் நிலநடுக்கங்கள்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2024, 8:56 am IST
பகிர்:

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன. 12) காலை 4.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

பூமிக்கடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை. 

கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments