உலகம்

யேமன் தலைநகரில் அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்

DIN

யேமன் தலைநகர் சனாவில் இரண்டாவது நாளாகப் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரைட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தைப் பாதிக்கும்வகையில் ஹெளதி அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன், யேமன் மீது தொடர்தாக்குதல் நடத்திவருகிறது.

ஹெளதி செய்தித் தொடர்பாளர், கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டுவீச்சுகள் நிகழ்ந்ததாகவும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமுற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என ஹெளதிகள் அறிவித்தனர்.

2014-ஆம் ஆண்டு அமைந்த, பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை எதிர்த்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் அமைப்பான ஹெளதி அமைப்பு, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தரை மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தக் கோரி கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

காதலா்கள் தீக்குளிப்பு: காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த காதலி!

வாழையில் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம்

சாலையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ. மயங்கி விழுந்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT