உலகம்

புதிய வசதியை அறிமுகம் செய்தது கூகுள்!

DIN

கூகுள் நிறுவனம் கடந்த ஜனவரி 17ல் சேம்சங் நிறுவனம் நடத்திய நிகழ்வில் தனது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. தனது புதிய அறிமுகத்திற்கு சர்க்கிள் டு சர்ச் (Circle to search) எனப் பெயரிட்டுள்ளது. இந்தப் புதிய செய்யறிவு தொழில்நுட்ப வசதியை சாம்சங் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த வசதி மூலம், கூகுள் தளத்திலோ அல்லது எந்த செயலியிலோ உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் ஒரு வட்டம் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். அதாவது, ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்த்துக்கொண்டுள்ளீர்கள், அதில் ஒருவர் கையில் புத்தகம் உள்ளது.

அந்த புத்தகத்தின் மேல் நீங்கள் ஒரு வட்டம் போட்டால் போதும். கூகுள் உங்களுக்கு சிறிய பாப்-அப் (Pop-up) மூலம் அந்த புத்தகம் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. 

தனியாக கூகுளுக்கு சென்று தேடி பின்னர் மீண்டும் பழைய வேலையைத் தொடர வேண்டிய அவசியம் இனி இல்லை என கூகுள் தெரிவிக்கிறது. இந்த வசதியை எல்லா செயலிகளிலும் பயன்படுத்தலாம்.

செல்போனின் ஹோம் பட்டனை அழுத்திப் பிடித்தால், கூகுள் அசிஸ்டன்ட் (Google assistant)-க்கு பதிலாக இந்த வசதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சேம்சங்கின் புதிய காலக்ஸி எஸ்24, கூகுளின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகிய செல்போன்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் குளித்த இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

முதியவரிடம் ரூ.73.50 லட்சம் மோசடி

ஜெயப்பிரியா கல்விக்குழுமப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT