உலகம்

20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த ஆப்பிள் விசன் ப்ரோ!

DIN

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விசன் ப்ரோ தொழில்நுட்பம் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட 18 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆப்பிளின் புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி (Mixed Reality) தொழில்நுட்பமான இந்த விசன் ப்ரோ சிலிர்ப்பூட்டும் மெய்நிகர் அனுபவங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. வரும் பிப்ரவரி 2-லிருந்து பயனாளர்கள் அவர்களது விசன் ப்ரோவைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

தலையில் அணிந்துகொள்ளக் கூடிய இந்த கருவி மூலம், அதி தெளிவான காணொலிகளைக் காணமுடியும். ஒரு 4கே தொலைக்காட்சியை விட அதிக பிக்சல்களைக் கொண்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற ஹெட்செட்கள் அறிமுகமாகியிருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் தரத்தில், புதிய அம்சங்களுடன் இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது எனக் காண மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இதில் டிஸ்னி+, அமேசான் பிரைம், பாரமவுன்ட்+ போன்ற தளங்களில் உள்ள படங்களைக் காணலாம் எனவும், யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களை நேரடியாக பயன்படுத்த முடியாது எனவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

60,000 முதல் 80,000 விசன் ப்ரோ ஹெட்செட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 3 லட்சம் ரூபாயாக (3,499 டாலர்கள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

SCROLL FOR NEXT