உலகம்

இந்திய விமானத்திற்கு அனுமதியளிக்காத மாலத்தீவு, 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

DIN

மாலத்தீவில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல இந்தியா வழங்கிய டோரினியர் விமானத்திற்கு மிகத் தாமதமாக அனுமதியளிக்கப்பட்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். 

அந்த சிறுவனுக்கு மூளைக் கட்டி காரணமாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை மாலத்தீவு தலைநகரான மாலிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோர் விமான அவசர ஊர்தி கேட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் தகுந்த நேரத்தில் உதவி செய்யாததால் 16 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபோன்ற மருத்துவ அவசர உதவிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனமான ஆசந்தா, கடைசி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்று வந்த விவகாரத்தில் இந்தியா, மாலத்தீவு இடையே மோதல்கள் ஏற்பட்டுவந்த நிலையில், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாலத்தீவு எம்பி மீகாலி நசீம், மாலத்தீவு அதிபரின் விரோதத்திற்காக மக்கள் ஏன் சாக வேண்டும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT