உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தில்லியில் உணரப்பட்ட அதிா்வு

PTI

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அதிா்வுகள் தில்லி வரை உணரப்பட்டது.

அந்த நாட்டின் மேற்கே அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 3 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உறையவைக்கும் குளிா் நிலவி வரும் சூழலில், சுமாா் 200 மீட்புக் குழுவினா் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நடுக்கத்தில் அதிா்வுகள் தில்லி தலைநகரப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சீனாவின் மேற்குப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக தொடா் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கான்சு பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமாா் 90,000 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் விளையாட தடை; தில்லிக்கு பின்னடைவா?

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT