முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: தாக்குதலில் 3 காவலர்கள் காயம்

காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் விரிவான சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் குறைந்தது 3 காவல் அதிகாரிகள் யாரென தெரியாத ஆயுதப் படை கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் பலத்த காயமுற்றதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தின் மலகந்த் பகுதியில் ஆயுதப் படையினர், முதலில் காவல் கட்டுபாட்டில் உள்ள சோதனை சாவடி மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர்.

கான் கார்ஹி தீர்வைகளின் சாவடியில் ஆயுதப்படையினர் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று காவலர்கள் காயமடைந்துள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் பகுதிக்கு விரைந்த காவலர்களின் படை மாவட்டத்தின் உள்நுழைவு மற்றும் வெளியேற்ற வாயில்களை மூடினர்.

அந்தப் பகுதியில் விரிவான தேடுதலைத் தொடங்கியுள்ள அவர்கள் குற்றவாளிகளைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →