உலகம்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு

DIN

சியோல் :  கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அதற்கு பதிலடியாக வடகொரியா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், தொடர்ந்து எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை நிகழ்த்தியிருப்பதாக தென் கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியது.

அந்த வகையில், வடகொரியா இந்த ஆண்டு நடத்தியுள்ள மூன்றாவது கட்ட எறிகணை சோதனை முயற்சி இதுவாகும். முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்த எறிகணையின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை தென்கொரிய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

SCROLL FOR NEXT