முகப்பு
உலகம்

பள்ளியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்: இஸ்ரேல் ராணுவம்

வடக்கு காஸாவில் உள்ள பள்ளிக்குள் பதுங்கியிருந்த 10 பயங்கரவாதிகளைப் பிடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.  

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:41 PM
கோப்புப்படம்
பகிர்:

வடக்கு காஸாவில் உள்ள பள்ளி ஒன்றில் சோதனை நடத்திய இஸ்ரேல் ராணுவம் 10 இஸ்லாமிய பயங்கரவாதிகளைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது. 10 பயங்கரவாதிகளும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். 

அதே பகுதியில் 10 ஏவுகணைகள், தாக்க தயாரான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. அனைத்து ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அழிக்கப்பட்டதென ராணுவம் தெரிவித்தது. 

மத்திய காஸாவில் 10 பாலஸ்தீன பயங்கரவாதிகளையும், அதே பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகளையும் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளது. 

Advertisement

வடக்கு காஸாவின் ஃபட்டி ஷட்டி பகுதியில் இஸ்ரேல் ராணுவத்திற்கு அருகில் இருந்த பயங்கரவாதிகளை வான்வழித் தாக்குதல்கள் மூலம் அழித்ததாகவும், அங்கிருந்த கட்டிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நிறைய ராணுவ ஆயுதங்களும், ஹமாஸுக்கு சொந்தமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் கிட்டத்தட்ட 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அன்று துவங்கிய போரில் இஸ்ரேல் இதுவரை 26,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. அதில் 11,000த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.