டொனால்ட் டிரம்ப் 
உலகம்

ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன்: டொனால்ட் டிரம்ப்!

"நான் நினைத்தால் 24 மணி நேரத்தில் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன்" என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்தாண்டு சிஎன்என் அரங்கத்தில் பேசுகையில், ”ரஷியர்களும், உக்ரேனியர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அதனை நிறுத்த விரும்புகிறேன். நான் நினைத்தால் அதை 24 மணி நேரத்தில் செய்துவிடுவேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரைச் சந்தித்து இதனை நடத்திக் காட்டுவதாக கூறியிருந்த டிரம்ப், மீண்டும் அதனை தற்போதைய தேர்தல் பிரசாரத்திலும் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் பைடனுடன் நடந்த விவாதத்தில், “நாம் புதினால் மதிக்கப்படும் ஒரு உண்மையான அமெரிக்க அதிபரைக் கொண்டிருந்தால், அவர் ரஷியாவை உக்ரைனுடன் போர் செய்ய அனுமதித்திருக்க மாட்டார்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களுடன் பேசிய ரஷிய பிரதிநிதி வாசிலி நெபென்சியா, 'உக்ரைன் பிரச்சினையை ஒரே நாளில் டிரம்ப்பால் தீர்க்க முடியாது. கடந்த 2022 ஏப்ரலில் உக்ரைனின் மேற்குப் பகுதி ஆதரவாளர்கள் இரு நாடுகளுக்கிடையே தீர்மானமாகவிருந்த அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்து ரஷியாவுடன் போரிடுமாறு கூறினர். தற்போது செலன்ஸ்கி அமைதி ஒப்பந்தம் எனும் பெயரில் நகைச்சுவை திட்டத்தைக் கொண்டு வருகிறார்’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT