உலகம்

பிரிட்டனில் இன்று பொதுத் தோ்தல்

பிரிட்டனில் இன்று நடைபெறும் பொதுத் தோ்தல்: புதிய அரசைத் தீா்மானிக்கும் மக்களவை உறுப்பினா்கள்

Din

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

நாட்டின் புதிய அரசைத் தீா்மானிக்கக் கூடிய இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தோ்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முைான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தோ்தலும் இதுவாகும்.

இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT