மாதிரி படம் Pixabay
உலகம்

புதையுண்ட வெடிபொருள் விபத்து: 7 பேர் பலி, 43 பேர் காயம்!

வியட்நாம் வெடிபொருள் விபத்து: குழந்தைகள் மற்றும் விவசாயிகள் அதிகம் பாதிப்பு

DIN

வியட்நாமுக்கு தெற்கில் உள்ள நாடான லாவ்ஸில் புதையுண்ட வெடிபொருள் வெடித்த விபத்தில் கடந்த ஆறு மாதங்களில் 7 பேர் பலியானதாகவும் 43 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துகள் பெரும்பாலும் குழந்தைகள் விளையாடும்போது அல்லது விவசாயிகள் நிலத்தை தோண்டும்போது நிகழ்ந்தவை.

ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் 33,500 புதையுண்ட வெடிபொருள்கள் 2,543 ஹெக்டர் நிலப்பரப்பில் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை லாவ் அரசு தெரிவிப்பதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

472 கிராமங்களில் 1,425 விழிப்புணர்வு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,53,663 பேருக்கு வெடிபொருள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 20 விபத்துகளில் 43 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும், இது போன்ற விபத்தில் பாதிக்கப்பட்ட 1,832 பேருக்கு உதவிகள் அளித்துள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

மிக அதிகமாக குண்டு வீசப்பட்ட நாடுகளில் ஒன்று லாவ்ஸ். 1964 முதல் 1973 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான டன் வெடிபொருள் இங்கு வீசப்பட்டுள்ளது. அவற்றில் 30 சதவிகிதம் வெடிக்காமல் புதையுண்டன.

அமெரிக்காவின் வியட்நாம் மீதான போரின் எச்சமாக கிடைக்கும் இவற்றால் இன்று வரை மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவிகள் 2-ஆம் இடம்!

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

SCROLL FOR NEXT