அயோத்தி ராமர் கோயில் 
உலகம்

அமெரிக்காவில் வைக்கப்படும் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி!

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அமெரிக்காவின் நியூயார்க்கில் வருகிற ஆகஸ்ட் 18 அன்று நடைபெற இருக்கும் இந்திய தின அணிவகுப்பில், அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அணிவகுப்பில் வைக்கப்படவுள்ள அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி 18 அடி நீளமும், 8 அடி உயரமும் கொண்டதாக இருக்குமென அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் அமிதாப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி அமெரிக்காவில் காட்சிக்கு வைக்கப்பட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய தின அணிவகுப்பு, இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் மிகப்பெரிய சுதந்திர தின கொண்டாட்டமாகும். 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் இந்த அணிவகுப்பு, நியூயார்க் மிட் டவுன் கிழக்குப் பகுதி 38வது தெருவிலிருந்து 27வது தெரு வரை நடைபெறும்.

இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்.ஐ.ஏ) நடத்தும் இந்த அணிவகுப்பில், பல்வேறு இந்திய அமெரிக்க சமூகங்களுக்கு பிரதிநிதித்தும் கொடுக்கப்பட்டு, நியூயார்க் தெருக்களில் கலாச்சாரப் பன்முகத்தன்மையின் அடையாளங்களைக் காணலாம்.

அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சில மாதங்களுக்கு முன் ’ராம் மந்திர் ரத யாத்திரை’ என்ற பெயரில் 60 நாள்களில் அமெரிக்காவின் 48 மாநிலங்களில் உள்ள 851 கோவில்களுக்கு யாத்திரை சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT