கிரீஸில் வாரத்தில் 6 நாள்கள் வேலை Center-Center-Kochi
உலகம்

கிரீஸில் வாரத்தில் 6 நாள்கள் வேலை! உழைப்பு மிகவும் முக்கியம்!

கிரீஸ் நாட்டில் வாரத்தில் 6 நாள்கள் வேலை செய்ய அனுமதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஏதென்ஸ்: உலகமே வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்தால் போதும் என்ற கொள்கையை நோக்கி நகர, எதிர்மாறாக, கிரீஸ் நாடு சட்டமியற்றியிருக்கிறது,

நாட்டில் உள்ள ஒரு சில தொழிற்சாலைகள் வாரத்தில் ஆறு நாள்கள் பணி நாள்களாகக் கொண்டு இயங்க அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு அது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது.

நாட்டின் மிகப் பழமையான தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள், உற்பத்தித் துறைகள் அல்லது வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கவும், வாரத்தில் ஏழு நாள்கள் பணியாற்றவும் சில விதிவிலக்குகளுடன் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

விதிவிலக்கான சில வேளைகளில் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்றும், அதிகப்படியான வேலைப்பளு இருக்கும் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டின் நிலைப்பாடானது, உலக நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு நேர் எதிராக உள்ளது. பிரிட்டன், ஐஸ்லாந்து, நியூசிலாந்து நாடுகளில் ஒரு வாரத்தில் நான்கு வேலை நாள்கள் என்ற திட்டம் சோதனையில் உள்ளது.

திறமைவாய்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையில் கிரீஸ் நாடு உள்ளது. இந்த நிலையில்தான் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கூடுதல் வேலைநாள் குறித்து கன்சர்வேடிவ் தொழிலாளர் துறை அமைச்சர் கூறுகையில், தற்போதிருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு திடீரென ஏற்பட்ட கூடுதல் வேலைப்பளுவை சரிகட்ட முடியாத வேலைகளில் தொழில் நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால், தொழிலாளர்களின் பாக்கெட்டில் கூடுதல் பணமும் கிடைக்கும் என்றார்.

இந்த சட்டப்படி, கூடுதலாக பணியாற்றும் ஆறாவது நாளுக்கு 40 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், இந்த சட்டம் வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் என்ற கொள்கையை ஒருபோதும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் தொழிலாளர்கள் சங்கங்கள், நாட்டில் உள்ள 5ல் 1 இளைஞர் ஏழ்மை நிலையில்தான் இருக்கின்றனர். இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டப்படி, ஆறாவது நாள் வேலையை எந்த தொழிலாளர் செய்ய முடியாது என்று கூற முடியும்? இதன் மூலம், முதலாளிகள், தொழிலாளர்கள் போல அல்லாமல் அடிமைகளைப் போல நடத்த அனுமதிக்கிறீர்கள் என்று அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT