அமைதிப் பேச்சுக்கு ஆபத்து!
காஸாவில் இஸ்ரேல் அண்மைக் காலமாக தீவிர தாக்குதல் நடத்திவருவது போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் அண்மைக் காலமாக தீவிர தாக்குதல் நடத்திவருவது போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகள் கத்தாரில் புதன்கிழமை (ஜூலை 10) தொடங்கும் பேச்சுவாா்த்தைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த மூன்று கட்ட போா் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இருந்தாலும், அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியதால் அந்த செயல்திட்டம் முடங்கியது.
இந்த நிலையில், இஸ்ரேல் நிரந்தர போா் நிறுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை ஹமாஸ் கைவிட்டது. அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை கடந்த வாரம் ஏற்பட்டது. இந்தச் சூழலிலும், காஸாவில் தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.