அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை 
உலகம்

அமெரிக்க அதிபர் மாளிகைக்கு 8 முறை வந்துசென்ற நரம்பியல் நோய் வல்லுநர்!

ஜோ பைடனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தான் நரம்பியல் நோய் வல்லுநர் செல்வதாக ஊடகங்கள் கருத்து

DIN

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு நரம்பியல் மருத்துவர் அடிக்கடி சென்று வருவதாக பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் ஜூன் 28ஆம் தேதியில் அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேரடி விவாதம் நடந்தது. டிரம்புடனான அந்த விவாதத்தின்போது பல முறை பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள், அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகைக்கு நரம்பியல் மருத்துவர் அடிக்கடி வந்து செல்வது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு நரம்பியல் தொடர்பான பார்கின்சன் மருத்துவ வல்லுநர் டாக்டர் கெவின் கன்னார்ட், கடந்தாண்டு ஜூலை முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையில் 8 முறை வந்து சென்றுள்ளார். இதனால், நரம்பியல் மருத்துவர் ஜோ பைடனுக்கு தான் சிகிச்சை அளிக்கிறாரா? ஜோ பைடனின் உடல்நலத்தில் என்ன பிரச்னை? என்பது போன்ற சந்தேகங்கள் அமெரிக்க ஊடகங்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ஜீன்-பியரிடம், ஜோ பைடனுக்கு பார்கின்சன் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்று கேட்கப்பட்ட போது, அந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது பாதுகாப்பற்றது என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால், அதே கேள்வியின் மீது அடுத்தடுத்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால், ஜோ பைடனுக்கு பார்கின்சன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஜோ பைடனின் மருத்துவர் கெவினிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, பார்கின்சன் மருத்துவர் வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுக்கு தான் சிகிச்சையளிக்கச் சென்றாரா? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மருத்துவர் கெவின் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது ``வெள்ளை மாளிகையில் அதிபருக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் மருத்துவர் கன்னார்ட் சிகிச்சை அளித்து வருகிறார். பல ராணுவ வீரர்களும் நரம்பியல் தொடர்பான சிக்கல்களை அனுபவிக்கின்றனர். அதனால் தான், டாக்டர் கன்னார்ட் வெள்ளை மாளிகைக்கு வந்து செல்கிறார். மேலும், அதிபர் ஜோ பைடனுக்கு பார்கின்சன் தொடர்பான பிரச்னைகள் எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!

SCROLL FOR NEXT