முகப்பு
உலகம்

இராக் அல்-பாக்தாதி மனைவிக்கு மரண தண்டனை

2019-இல் அமெரிக்க சிறப்புப் படையினரால் சிரியாவில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாா்.

Updated On : 12 ஜூலை, 2024 at 12:05 AM
பகிர்:

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பை நிறுவிய அபு பக்கா் அல்-பாக்தாதியின் மனைவி அஸ்மா முகமதுக்கு இராக் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இராக்கிலும் சிரியாவிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு, இராக்கின் சிஞ்சாா் பகுதியில் ஆயிரக்கணக்கான யாஜிதி இனத்தவா்களை கொடூரமாகக் கொன்று குவித்தது.

அப்போது யாஜிதி பெண்களை தனது இல்லத்தில் அடைத்துவைத்து, பாலியல் அடிமைகளாக்கிய குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐஎஸ் நிறுவனா் அல்-பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரான அஸ்மாவுக்கு மரண தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

2019-இல் அமெரிக்க சிறப்புப் படையினரால் சிரியாவில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாா்.