கோப்புப் படம் 
உலகம்

உயிரணு வழங்கியதாக கூறுவது பொய்: மறுப்பு தெரிவித்த எலான்!

அமெரிக்க செய்தி நிறுவனத்தின் செய்திக்கு மறுப்பு தெரிவித்து எலான் எக்ஸ் பதிவு

DIN

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக எலான் மஸ்க் உயிரணுவை தானமாக அளித்தார் என்ற செய்திக்கு எலான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது சொந்த உயிரணுவை ஆராய்ச்சிக்காக தானமாக அளித்துள்ளார் என்று செய்தி வெளியிட்டது. அதாவது ``செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தவையும் அடங்கும். இந்த ஆராய்ச்சிக்காக மஸ்க், தனது சொந்த உயிரணுவை வழங்கியுள்ளார்” என்று கூறியது.

ஆனால், எலான் மஸ்க் அந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், அவர் அவ்வாறு உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளைவு, நெளிவு... அமைரா தஸ்தூர்!

பெனால்டியை தவறவிட்ட யுனைடெட் வீரர்: மோசமான சாதனையிலும் பங்கேற்பு!

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

SCROLL FOR NEXT