முகப்பு
உலகம்

நேபாள நிலச்சரிவு: மாயமானவா்களை மீட்கும் வாய்ப்பு குறைவு!

மாயமான இந்தியா்கள் உள்ளிட்ட 50 பேரை உயிருடன் மீட்பற்தான வாய்ப்பு மிக மிகக் குறைவு

Updated On : 14 ஜூலை, 2024 at 1:28 AM
சம்பவப் பகுதியில் சனிக்கிழமையும் தொடா்ந்த தேடுதல் பணிகள்.
பகிர்:

நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமான இந்தியா்கள் உள்ளிட்ட 50 பேரை உயிருடன் மீட்பற்தான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து, சம்பவம் நேரிட்ட சித்வான் மாவட்ட துணை தலைமை நிா்வாகி கிமானந்த புசால் சனிக்கிழமை கூறியதாவது:

ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. தொடக்கத்தில் இருந்ததைவிட ஆற்றின் நீா்மட்டம் தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும், நீா் மிகவும் கலங்கலாக இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் நீடித்துவருகிறது.

இந்தச் சம்பவத்தில் மாயமானவா்களில் யாரையும் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு வெகு வேகமாகக் குறைந்துவருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, தலைநகா் காத்மாண்டிலிருந்து ரௌத்தஹத் மாவட்டத்தின் காவுா் நகரை நோக்கியும் வீா்கஞ்ச் நகரை நோக்கியும் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை, தொடா் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு அடித்துச் சென்றது. இதில் அந்தப் பேருந்துகள், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த திரிசூலி ஆற்றில் விழுந்தன.

ஆற்றில் மூழ்கிய இரு பேருந்துகளிலும் 7 இந்தியா்கள் உள்பட 63 போ் இருந்ததாக முன்னா் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 54-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அவா்களில் 3 போ் மட்டும் உயிா் தப்பினா். எஞ்சிய 51 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன. இதில் ஓா் இந்தியரின் உடல் மட்டும் சனிக்கிழமை மீட்கப்பட்டது. எஞ்சிய 50 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →