உலகம்

துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப் காயம்!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு..

DIN

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.

நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT