கோப்புப் படம் 
உலகம்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை பைடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஒபாமா!

கருத்துக் கணிப்புகளில் எதிர்மறை முடிவுகள் வருவதால் ஜனநாயகக் கட்சியினர் கவலை

DIN

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகக் கோரி பராக் ஒபாமா தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே கூறி வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

ஏனெனில், போட்டிகள் நிறைந்த முக்கியமான ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், நான்கு மாநிலங்களில் பைடனுக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்துள்ளன. இதனால் தான், ஜோ பைடனை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஒபாமா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தின் போதே, ஜோ பைடனின் தடுமாற்றம் பேசுபொருளாகியிருந்தது.

அப்போதிலிருந்தே, அவர் அதிபர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. தேர்தலில் பைடன் போட்டியிடுவதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு கூறி, ஜனநாயகக் கட்சியின் 264 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் வரையில் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, பலரும் தனிப்பட்ட முறையில் தங்களின் எதிரான கருத்துகளையும் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT