உலகம்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் பூர்வீகமாகக் கொண்வடர் கவின் தசூர்(29). இவருக்கும் மெக்சிகோவைச் சேர்ந்த விவியனா ஜமோராவுக்கும் ஜூன் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் தனது மனைவியுடன் தசூர் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது இண்டி நகரில் அவருக்கும் டிரக் டிரைவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டிரக் டிரைவர் சுட்டதில் தசூர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து பதிலளித்த இண்டியானாபோலிஸ் காவல் துறை அதிகாரி, சந்தேகப்படும்படியான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக கூறினார்.

விசாரணையின் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்காப்புக்காக செயல்பட்டிருக்கலாம் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT