கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்த புகை மண்டலம். 
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 70 போ் உயிரிழப்பு

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

Din

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 70 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கான் யூனிஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இஸ்ரேலால் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளும் இதில் அடங்கும்.

இந்த நிலையில், இஸ்ரேல் படையினா் அங்கு நடத்திய தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவால் போா் அகதிகள் முகாம் அமைந்துள்ள அல்-மாவாசி உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக காஸா பொதுமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் 1,139 போ் உயிரிழந்தனா். அங்கிருந்து ஏராளமானவா்களை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,145 போ் உயிரிழந்ததாகவும் 90,257 போ் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT