படம் | ஏபி
உலகம்

இஸ்ரேலில் பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் -ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை

பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

DIN

இஸ்ரேலில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ராணுவ வீரர்கள் பாலஸ்தீன ஹமாஸ் கைதிகளிடம் கன்ணியக் குறைவான முறையில் நடந்து கொள்வதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்னம் உள்ளன.

இந்த நிலையில், ஹமாஸ் படையை சேர்ந்த நபர் ஒருவர், இஸ்ரேலில் அடைக்கப்பட்டுள்ள மையத்தில் பாலியல் ரீதியாக கொடூரமான முறையில் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள கைதிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பாலியல் புகாரைத் தொடர்ந்து, வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து இஸ்ரேலின் வலதுசாரி அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ராணுவ வீரர்கள் மீதான நடவடிக்கைக்கு அந்நாட்டின் வலதுசாரி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட், வீரர்களிடம் விசாரணை மேற்கொள்ள எவ்விதத் தடையும் இருக்கக்கூடாதென தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளதும், லெபனானுக்கு ஆதரவாக, இஸ்ரேலை எதிர்த்து செயல்படத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்திருத்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது உள்நாட்டிலும் போராட்டம் வெடித்துள்ளதால் இஸ்ரேலை சுற்றி பதற்றமான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT