வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 
உலகம்

140 கிலோ... உடல் எடையால் பாதிக்கப்பட்ட வடகொரிய அதிபர்?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

DIN

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-இன் உடல் எடை அதிகரித்து, உடல் பருமன் தொடர்பான உடல்நலப் பிரச்னைகளான ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து புதிய மருந்துகளை அவரது அதிகாரிகள் வரவழைக்க முயற்சிப்பதாக தென் கொரிய உளவுத் துறை நேற்று (ஜூலை 29) தெரிவித்துள்ளது.

தற்போது 40 வயதாகும் கிம் ஜான் உன், அதிக குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு முன்னர் வடகொரியாவை ஆட்சிசெய்த இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

5 அடி 7 அங்குலம் உயரமுள்ள கிம் முன்னதாக 140 கிலோ உடல் எடை கொண்டிருந்ததாகவும், கடந்த 2021-ம் ஆண்டு அதிக அளவில் எடை குறைத்து காணப்பட்டதாகவும் அவரைத் தொடர்ந்து கண்காணிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், அண்மையில் வெளியான ஒரு காணொளியில் அவரது எடை மீண்டும் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

தென்கொரிய உளவுத்துறை நிறுவனமான ’தேசிய புலனாய்வுத் துறை’ அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவித்த தகவலின் படி, கிம்மின் உடல் பருமன் 140 கிலோ வரை உயர்ந்திருக்கலாம் என்றும் அவருக்கு இதயக் கோளாறுகள் இருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிடம் இருந்து புதிய மருந்துகளைப் பெற வடகொரிய அதிகாரிகள் முயற்சிப்பது குறித்த தகவல்கள் கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

உலகின் மிக ரகசியமான நாடுகளில் ஒன்றான வடகொரியா குறித்தும் அதிபர் கிம் ஜாங் உன் குறித்தும் வெளியாட்கள் அறிய முயல்வது மிகக் கடினமான ஒன்று. ஆனால், அதில் தென்கொரிய உளவுத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

மேலும், கிம்மின் உடல்நிலை வடகொரியாவிற்கு வெளியே பெரிதும் விவாதத்திற்குள்ளான விஷயமாக மாறியுள்ளது. இதில், அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த வடகொரியா வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் மற்றும் ஆட்சியை நிர்வகிக்க அடுத்த ஆட்சியாளராக யாரையும் கிம் அறிவிக்கவில்லை என்பதும் அடங்கும்.

கிம் ஜாங் உன் அவரது மகள் கிம் ஜூ ஏ உடன்.

கிம்மின் மகளாக அறியப்படும் கிம் ஜூ ஏ பொது நிகழ்ச்சிகளில் 2022 முதல் அவ்வப்போது கிம்முடன் தோன்றியுள்ளார். 10 அல்லது 11 வயது என கூறப்படும் அவர் மீது கிம்முக்கு அதிக பாசமும், மரியாதையும் இருப்பதாகவும், அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அவரது மகளும் உடன் வருவதாலும் அவரை வாரிசாக அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT