ஸெலென்ஸ்கி- மோடி ANI
உலகம்

உக்ரைன் அதிபரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடி!

மோடிக்கு ஸெலென்ஸ்கியின் வாழ்த்து: நன்றி தெரிவித்த பிரதமர்

DIN

உக்ரைனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி.

அதிபர் ஸெலென்ஸ்கியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “பிராந்தியங்களில் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு உருவாக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” எனத் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக ஸெலென்ஸ்கி, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றியை தக்கவைத்ததை வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை இந்திய பாராளுமன்ற தேர்தலில் பெற்றுள்ளது. இந்திய மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பு கிடைக்க விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையான நட்புறவு தொடருமென எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

சென்னை ஐஐடி குளோபல், ஐடியாபாஸ் இணைந்து புத்தொழில் சுற்றுச்சூழலை வலுப்படுத்தத் திட்டம்

லடாக் மாநில அந்தஸ்து போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

நெல்லை அருகே உதவி ஆட்சியா் எனக் கூறி உறவினரிடம் நகை மோசடி: 4 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT