எலான் மஸ்க் (கோப்புப் படம்) AFP
உலகம்

பணிபுரியும் பெண்களுடன் பாலியல் உறவு! எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி..

DIN

உலகின் முன்னணி பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டுள்ளன.

இதுபற்றிய செய்தியை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ’தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் வெளியிட்டுள்ளது.

தன்னுடைய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரியும் சில பெண் ஊழியர்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் தனது குழந்தைகளைப் பெற்றுத் தருமாறு, பலமுறை கேட்டுக் கொண்டதாகவும் கூறுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் எலான் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிப்படைந்த பெண்கள் கூறுவதாவது: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களிலும் எலான் மஸ்க், ஒரு வினோதமான மற்றும் ஏற்கத்தகாத கலாசாரத்தை உருவாக்கியுள்ளார். அந்த இரு நிறுவனங்களிலும் பாலியல் ரீதியான நகைச்சுவைகள் சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தன. முன்னாள் ஊழியர்கள்தான், இதுபோன்ற பாலியல் கலாசாரத்தை உருவாக்கி விட்டுள்ளனர். பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது. அங்கு பாலியல் நகைச்சுவைகளும் மற்றும் பிற வகையான துன்புறுத்தல்களும் பொறுத்துக்கொள்ளப்பட்டன. புகார் அளிக்கும் பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர் எனக் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்ட அறிக்கையில், பாதிப்புற்ற சில பெண்களின் குற்றச்சாட்டுகளையும் விளக்கியிருந்தது.

அதாவது, 2013ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸில் இருந்து ராஜிநாமா செய்த பெண் ஒருவர், மஸ்க் தன்னிடம், அதிக ஐ.கியூ. உள்ள குழந்தைகள் அதிகம் வேண்டும்; எனவே, தன்னுடன் உறவு வைத்துக்கொண்டு, தனது குழந்தைகளைப் பெறுமாறு, பலமுறை கேட்டுக் கொண்டதாகக் கூறுகிறார்.

2016ஆம் ஆண்டில் எலான் மஸ்க்கின் தனியார் ஜெட் விமானத்தில் பணிபுரியும் ஒரு விமான பணிப்பெண், சிற்றின்ப மசாஜுக்கு ஈடாக தனக்கு ஒரு குதிரையை வாங்கித் தர எலான் முன்வந்ததாகக் கூறினார். மேலும், எலானுடன் பாலியல் உறவில் இருந்த ஸ்பேஸ்எக்ஸில் பயிற்சியாளராக இருந்த ஒரு பெண்ணும், எலான் மஸ்கின் நிர்வாகக் குழுவில் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரிந்த மற்றொரு பெண்ணும், எலான் மஸ்க் இரவில் தனது வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைப்புகள் விடுத்ததாகக் கூறி, இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், புகார் தெரிவித்த ஊழியர்களுக்கு எதிராகப் பழிவாங்கல் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கலிபோர்னியாவின் சிவில் உரிமை அமைப்பின் விசாரணையில் உள்ளது.

பணிநேரங்களில் எல்எஸ்டி, கோகைன், எக்ஸ்டசி, காளான்கள் போன்ற போதைப்பொருள்களைத் தொடர்ச்சியாக எலான் மஸ்க் பயன்படுத்தியதாகவும் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT