ஹெலென் அண்டெனுச்சி 
உலகம்

81 வயதில் ரயில் ஓட்டுநராக பணிபுரியும் மூதாட்டி!

அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டுநராக பணிபுரியும் மூதாட்டி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

DIN

அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலென் அண்டெனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் போஸ்டான் நகரிலுள்ள, மஸாச்சுசெட்ஸ் பகுதி ரயில்வே போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரியும் ஹெலென் கின்னஸ் புத்தகத்தின் சாதனைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டில், தனது 53 வயதில் ரயில் ஓட்டுநர் பணியைத் தொடங்கிய ஹெலென், ஒரே ரயில் பாதையில் இன்று வரை பணிபுரிந்து வருகிறார்.

தனது வேலை குறித்துப் பேசும் ஹெலென், “எனக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த வேலையி மூலம் நான் வீட்டிற்கு வெளியே வரவும், என்னுடைய நேரத்தை நிம்மதியாகச் செலவிடவும், அமைதியைப் பெறவும் உதவுகிறது” என்றார்.

ஹெலென் வேலைக்குச் சேருகையில் ஓரிரு பெண் ஓட்டுநர்களே பாணியில் இருந்ததாகவும், அதிர்டவசமாக இதுவரை எந்தப் பாகுபாட்டையும் வேலையில் சந்தித்ததில்லை என்றும் கூறுகிறார். தற்போது அவர் பணிபுரியும் பணிமனையில் 40 சதவீதம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

மிகவும் பிரபலமான இத்தாலியக் குடும்பத்தில் இருந்து வந்தததால் தன்னை யாரும் அவமரியாதையாக நடத்தியதில்லை என்று கூறும் ஹெலென், தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்து தனக்கான இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

ஹெலெனின் 82-வது பிறந்தநாள் வர இருப்பதைத் தொடர்ந்து அவரது ஓய்வு குறித்துக் கேட்டபோது, “நான் தினமும் வேலைக்கு வருவதையும் பயணிகளை சந்திப்பதையும் விரும்புகிறேன். ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கவில்லை. இங்கு வரும் பயணிகளை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர்களைப் பாதுகாப்பாக அவர்கள் விரும்புமிடத்தில் கொண்டு சேர்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறுகிறார்.

பணியாளர்கள் மற்றும் பயணிகளிடயே நற்பெயரை பெற்று பலரது வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட ஹெலெனின் ரயிலுக்காக தினசரி பயணிகள் பலரும் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT