அறுவடைக்கு பிறகு வயல்களில் மூட்டப்பட்ட தீ, காட்டுப் பகுதிகளில் பரவ பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 80-க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக களத்திலிருந்து கிடைக்கிற தகவல்கள் தெரிக்கின்றன.
ஏராளமான விலங்குகள் பலியாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
அருகிலுள்ள கிரீஸ் நாட்டின் தெற்கு ஏதேன்ஸின் சில கிராமங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கு தியர்பகிர் மற்றும் மார்டின் மாகாணங்களுக்கு இடையே தீ ஏற்பட்டது. பலமாக வீசும் காற்று மற்றும் வறண்ட வானிலை தீ பரவ சாதகமாக அமைந்துள்ளது.
துருக்கி சுகாதார அமைச்சகம் எக்ஸ் வலைத்தளத்தில் 11 பேர் பலியானதாகவும் ஆறு குழந்தைகள் உள்பட 80-க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் பற்றிய தீயின் பின்னணி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கிரீஸிலும் தீ பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. முதலில் பாதிக்கப்படுவது ஏதேன்ஸ் என்பதால் ஏதேன்ஸுக்கு தெற்கில் உள்ள ஆறு கிராமங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் நீர் தெளிக்கும் விமானம் மூலம் தீயணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் காடுகள் மற்றும் பூங்காகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.