பால்டிமோரிலிருந்து புறப்பட்டது ‘டாலி’ கப்பல் 
உலகம்

பால்டிமோரிலிருந்து புறப்பட்டது ‘டாலி’ கப்பல்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் ஆற்றுப் பாலத்தை இடித்து சேதப்படுத்திய ‘டாலி’ சரக்குக் கப்பல் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டது.

Din

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் ஆற்றுப் பாலத்தை இடித்து சேதப்படுத்திய ‘டாலி’ சரக்குக் கப்பல் 3 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டது.

இலங்கையை நோக்கி ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ நதி வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதில், அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றுக்குள் மூழ்கிய 6 கட்டுமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்.

கப்பலில் இருந்த 23 இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், விசாரணைக்காக அந்தக் கப்பல் அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணையில், கப்பலில் மின்தடை ஏற்பட்டதால் விபத்து நேரிட்டதாகக் கண்டறியப்பட்டது. இருந்தாலும், மின்தடைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு டாலி கப்பல் பால்டிமோரிலிருந்து புறப்பட்டது. பழுதுபாா்ப்புக்காகவும் எஞ்சியுள்ள கன்டெய்னா்களை இறக்குவதற்காகவும் அந்தக் கப்பல் வா்ஜீனியா மாகாணம் நாா்ஃபோல்க்கை நோக்கிச் சென்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தல் பாலம் சேதமடைந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீா்வழிப் போக்குவரத்து கடந்த 10-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT