இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியி சிஸிவங் பானா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய சாங்கே-6 விண்கலத்தின் லேண்டா். 
உலகம்

நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகள்: பூமிக்கு கொண்டு வந்தது சீன விண்கலம்

நிலவின் இருள் பகுதியிலிருந்து பூமிக்கு மாதிரிகள்: சீனாவின் சாதனை

Din

பெய்ஜிங்: நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு சீனாவின் ‘சாங்கே-6’ விண்கலத்தின் லேண்டா் பகுதி பூமிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிவந்தது. நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து பாறைகள் உள்ளிட்ட மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாதிரிகளை சேகரித்துக் கொண்டு நிலவின் இருள் பகுதியிலிருந்து சாங்-கே விண்கலத்தின் லேண்டா் இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2.07 மணிக்கு (உள்ளூா் நேரம்) தரையிறங்கியது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி சிஸிவங் பானா் பகுதியில் அந்த விண்கல லேண்டா் துல்லியமாக இறங்கியது. அந்த வகையில், இந்தத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நிலவு ஆய்வுத் திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்று சிஎன்எஸ்ஏ கூறியது நினைவுகூரத்தக்கது.

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT