கோப்புப்படம் 
உலகம்

கென்ய வன்முறை: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தல்!

கென்யாவில் நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

DIN

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்முறையால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கென்யா பாராளுமன்றம் குடிமக்களுக்கான வரிகளை அதிகப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து கென்யாவின் தலைநகரான நைரோபி மற்றும் பல நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

”தற்போது கென்யாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அநாவசியமாக வெளியே செல்வதைத் தவிர்த்து நிலைமை சீராகும் வரை பாதுகாப்பாக இருக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது 20,000 இந்தியர்கள் வரை கென்யாவில் வசிப்பதாக அதிகாரப்பூர்வத் தக்வல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயக்காரி... சமீனா அன்வர்!

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

இதய ஓரத்தில் என்றும்.... சமந்தா!

இளமை திரும்புதே... மஞ்சு வாரியர்!

SCROLL FOR NEXT