எலான் மஸ்க் 
உலகம்

எலான் மஸ்க் பிறந்தநாள்.. என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்?!

எலான் மஸ்க் பிறந்தநாளை முன்னிட்டு, பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னணி தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் தன்னுடைய 53வது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படம், 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாம். அந்த புகைப்படத்தில் மிக இளைஞரான எலான் மஸ்க் நின்றிருக்கிறார், அவர் பின்னணியில் கடற்கரையும் அமெரிக்க கொடியும் பறந்துகொண்டிருக்கிறது.

எலான் மஸ்க், இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இதனை லைக் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து லட்சக்கணக்கானோர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை எலான் மஸ்குக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இன்று காலை, எலான் மஸ்க் தாயாரும் கூட, பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

மயி மஸ்க், தன்னுடைய மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, 4வது பிறந்தநாளின்போது, பிறந்தநாள் கேக்கைப் பார்த்து சிரித்ததைப் போலவே, தற்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், எலானை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT