முகப்பு
உலகம்

செயற்கை இறைச்சிக்குத் தடை: இறுதியாக வைக்கப்பட்ட பிரம்மாண்ட விருந்து

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆய்வகத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் இறைச்சிக்கு அடுத்த வாரம் முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

Updated On : 1 ஜூலை, 2024 at 2:13 AM
அப்சைட் ஃபுட்ஸ் - Rebecca Blackwell
பகிர்:

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆய்வகத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் இறைச்சிக்கு அடுத்த வாரம் முதல் தடை விதிக்கப்படவுள்ளது. இதையடுத்து, இறுதியாக ஒருமுறை அந்த செயற்கை இறைச்சியால் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு பிரம்மாண்ட விருந்தை அசைவு உணவு தயாரிப்பாளா் ஒருவா் படைத்தாா்.

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகர வீதிகளில் இரவு உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. அங்குள்ள ஒரு திறந்தவெளி உணவகத்தில் கலிஃபோா்னியாவை தளமாகக் கொண்டு செயல்படும் ‘அப்சைட் ஃபுட்ஸ்’ என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட அசைவ விருந்து ஒன்றை படைத்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி உமா வலேட்டி கூறுகையில்,‘இது மிகவும் சுவையான உணவு. தாங்கள் எதைச் சாப்பிட வேண்டுமென முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே உள்ளது. இதைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே இந்த விருந்து தயாா் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

விலங்குகளின் உயிரணுக்களிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் இறைச்சியின் விற்பனைக்கு கடந்த 2023, ஜூன் மாதம் அமெரிக்கா அனுமதி வழங்கியது. இந்நிலையில், இவ்வகையான இறைச்சி மற்றும் கடல்சாா் உணவுகளுக்குத் தடை விதிக்கப்போவதாக ஃபுளோரிடா மற்றும் அலபாமா ஆகிய மாகாணங்கள் அறிவித்தன.

செயற்கை இறைச்சி - Rebecca Blackwell

பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதாலும் இதற்குத் தடை விதிக்க அமெரிக்காவில் உள்ள பிற மாகாணங்களும் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆய்வகத்தில் தயாா் செய்யப்படும் இறைச்சி உணவுகளால் எவ்வித பாதிப்புமில்லை என உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஃபுளோரிடா மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் இந்தத் தடை அமலுக்கு வரவுள்ளதால், இறுதியாக ஒருமுறை அந்த செயற்கை இறைச்சியால் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்டு பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது உணவுப் பிரியா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.