முகப்பு
உலகம்

92 வயதில் 5-வது திருமணம் செய்யும் பிரபல ஊடகவியலாளர்!

பிரபல ஊடகவியலாளர் ரூபர்ட், தனது 92 வயதில் 5-வது திருமணம் செய்யவுள்ளார்.

Updated On : 10 மார்ச், 2024 at 5:57 AM
பகிர்:

92 வயதான பிரபல ஊடகவியலாளர் ரூபர்ட் முர்டோக், தனது காதலியான எலினா ஜுகோவாவுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் ரூபர்ட் முர்டோக் தனது காதலி எலினா ஜுகோவாவுடன் கலிஃபோர்னியாவில் மொரகாவில் உள்ள அவரது திராட்சைத் தோட்டத்தில் வரும், ஜூன் 1 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எலினா ஜுகோவா மாஸ்கோவைச் சேர்ந்தவர். 67 வயதான இவர், ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். ரூபர்ட் முர்டோக்கின் மூன்றாவது மனைவி வெண்டி டெங் மூலம் எலினாவை, ரூபர்ட் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ரூபர்ட் முர்டோக் - எலினா இருவரும் கடந்த கோடைக்காலத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில், முன்னதாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

கடந்தாண்டு ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் விலகினார்.

இந்த நிலையில், எலினாவை ரூபர்ட் முர்டோக் 5-வது திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →