தெற்கிலிருந்து மையப் பகுதிக்கு செல்லுங்கள்: இஸ்ரேலின் திட்டமென்ன?
காஸா மக்கள் இடம்பெயர்வு: இஸ்ரேலின் மனிதாபிமான நடவடிக்கையா?
காஸாவின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கையை விரிவுப்படுத்தும் வகையில், ராபாவில் தஞ்சமடைந்துள்ள 14 லட்சம் பாலஸ்தீனர்களை மத்திய காஸா நோக்கி இடம்பெயரச் செய்ய திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மனித தீவாக மாற்றப்பட்ட மத்திய காஸா பகுதியில் தற்காலிக தங்குமிடம், உணவு, நீர் மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கவுள்ளதாகவும் இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகேரி புதன்கிழமை தெரிவித்தார்.
மனித நெரிசல் மிகுந்த ராபாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என்பது பேரழிவை ஏற்படுத்தும் என மனிதநேய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் தற்காலிக குடியிருப்புகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
போரில் இதுவரை 31,270 பேர் பலியாகியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்.7 தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் பல மாதங்களாக தொடர்ந்துவரும் நிலையில் மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் நாடுகளால் இருதரப்புக்குமிடையே அமைதி உடன்படிக்கையை எட்ட இயலவில்லை.