குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் AP
உலகம்

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

டிரம்பின் கருத்துக்கு யூத தலைவர்கள் கண்டனம்

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் அதிபரும் இந்தாண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகக் கருதப்படுகிற டொனால்டு டிரம்ப், யூதர்கள் யாரெல்லாம் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிக்கிறார்களோ அவர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் எனத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஜனநாயகக் கட்சியினர் அடிக்கடி விமர்சிப்பது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “அவர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனநாயகக் கட்சி இஸ்ரேலை வெறுக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “யூதர்கள் யாரெல்லாம் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தங்கள் மதத்தை வெறுக்கிறார்கள். அவர்கள் இஸ்ரேலைப் பற்றிய அனைத்தையும் வெறுக்கிறார்கள். இஸ்ரேல் அழிவதைக் குறித்து அவர்கள் வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பெரும்பாலான அமெரிக்க யூதர்கள் ஜனநாயகக் கட்சியினராக கருதப்படும் நிலையில் டிரம்பின் இந்தக் கருத்து உடனடியாக ஜனநாயகக் கட்சியினராலும் யூத தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பைடனின் அரசியல் பிரசார முகமை, “இங்கு வெட்கப்பட வேண்டிய ஒரே ஆள் டிரம்ப்தான். இந்த நவம்பரிலும் தோற்கப் போவது டிரம்ப் மட்டும்தான். அமெரிக்கர்கள் டிரம்பின் வெறுப்பு பிரசாரம், தனிநபர் தாக்குதல்கள், அதிதீவிர முன்னெடுப்புகளை வெறுக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

பிக் பாஸ் போட்டியாளர் எஃப்.ஜே.வுக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் என்ன தொடர்பு?

'இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT