டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்ந்துள்ளதைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சர்வதேச ரீதியிலான அறிவிப்பு இந்திய பங்குச்சந்தையில் இன்று (பிப்.3) காலை கடுமையாக எதிரொலித்தது. அதன்படி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 9.31 மணியளவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 702 புள்ளிகள் உயர்ந்து 25,790.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2291.17 புள்ளிகள் உயர்ந்து 83,966.99 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி50-யில் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இஸ்ஃபோஸிஸ், பஜாஜ், எல் அண்ட் டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் நல்ல லாபம் ஈட்டின.
அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் கணிசமாக சரிவைச் சந்தித்து வர்த்தகமாகி வருகின்றன.
தொடர் சரிவில் இந்த இடிஎஃப்கள் மீண்டும் உயர்வைக் காணத் தொடங்கியுள்ளன. அதில், எஸ்பிஐ நிஃப்டி50, நிப்பான் இந்தியா, ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட இடிஎஃப்கள் மீண்டும் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
The India–US trade deal has given the Sensex and Nifty their strongest tailwind in months, setting the stage for what could become a far more extended market surge.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.