படகு விபத்து 80 ரோஹிங்கயாக்கள் மாயம்
Updated On : 22 மார்ச், 2024 at 11:35 PM
இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 80 ரோஹிங்கயா அகதிகள் மாயமாகினா். பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து (படம்) மிக மோசமான நிலையில் 69 போ் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் 151 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் கூறிய நிலையில், மாயமாகியுள்ள சுமாா் 80 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.