முகப்பு
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவ நிலையம்
உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 7 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ நிலையத்தில் 7 பேர் உயிரிழப்பு

உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 7 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ நிலையத்தில் 7 பேர் உயிரிழப்பு

Updated On : 27 மார்ச், 2024 at 11:04 AM
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவ நிலையம்
பகிர்:

தெற்கு லெபனானில் உள்ள துணைமருத்துவ நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியானதாக சன்னி முஸ்லீம் அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஹீப்ரு கிராமத்தில் உள்ள இஸ்லாமிய அவசர மற்றும் மீட்பு குழுவின் அலுவலகம் இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது.

பலியான 7 மருத்துவ பணியாளர்களின் பெயரை அமைப்பு வெளியிட்டுல்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் அக்டோபர் ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்து மோதல் வெடித்து வருகிறது. 5 மாதத்திற்கு மேலாக நடந்துவரும் போரில் மிக மோசமான தாக்குதல் இது.

நிவாரண பணிகள் மேற்கொள்ளும் குழுவின் மீதான அப்பட்டமான தாக்குதல் கண்டனத்துக்குரியது என அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கவிருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், ஹீப்ருவில் லெபனான் முஸ்லீம் அமைப்பின் ராணுவ கட்டடத்தைத் தகர்த்ததாகவும் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ஒருவரை கொன்றதாகவும் தெரிவித்தது. அந்த நபர் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் பங்கெடுத்தவர் எனவும் அவருடன் சேர்த்து இன்னும் சிலரையும் கொன்றதாக ராணுவம் தெரிவித்தது.

அக்.7 இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதுமுதல் லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் மோதல் வெடித்து வருகிறது. எல்லையில் மட்டும் நடந்துவந்த போர் கடந்த பிப்ரவரி முதல் இஸ்ரேல் வடகிழக்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதால் தற்போது எல்லை தாண்டி விரிவடைந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →