உலகம்

மாஸ்கோ இசையரங்கத் தாக்குதல்: தஜிகிஸ்தானில் 9 பேர் கைது

DIN

மாஸ்கோ கச்சேரி அரங்கில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் வெள்ளிக்கிழமை குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, கச்சேரி அரங்கிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய ஒரு மர்ம கும்பல் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது மற்றும் அரங்கிற்கு தீ வைத்துவிட்டு பின்னர் அவர்கள் "வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றனர்." இந்த தாக்குதலில் 144 பேர் பலியாகினர். ஏராளமானவா்கள் காயமடைந்தனா். பின்னா் 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

ரஷியாவில் அண்மை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. இந்த நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

மறுவெளியீடாகும் நாயகன்!

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

ஓடிடியில் வெளியானது மதராஸி!

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT