ராபாவில் தஞ்சமடைந்த பாலஸ்தீன குடும்பம் (கோப்புப் படம்) 
உலகம்

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

காஸாவின் உணவு பஞ்சம்: அதிகரிக்கும் அபாய அறிகுறிகள்

DIN

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பஞ்சத்தின் அபாயம் தொடர்வதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சமீப வாரங்களில் அதிகளவில் உணவுப் பொருள்கள் நிவாரணமாக காஸாவுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் பாலஸ்தீன பிரதிநிதி ரிக் பீப்பர்கார்ன், காஸாவில் பஞ்சத்தின் அபாயம் இன்னும் நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அக்.7 இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதால் தொடங்கிய போர் ஏழாவது மாதமாக தொடர்ந்து வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குக் குறைவான 40 குழந்தைகள் கூடுதல் உடல்நலப் பிரச்னைகளோடு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

10 முதல் 14 கிகி எடை இருக்க வேண்டிய 2 வயதுக் குழந்தைகள் வெறும் 4 கிலோ இருப்பதாகவும் போருக்கு முன்பாக இந்த பிராந்தியத்தில் ஊட்டச்சத்து குறைபாடு பெரியளவில் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என பீப்பர்கார்ன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வாரங்களில் 25 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இறந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போரினால் மட்டுமின்றி போதிய உணவு கிடைக்காததால் ஏற்படுகிற இதுபோன்ற இறப்புகள் உலகளவில் கவனத்தை கோரியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்

அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணையை அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு

தேசிய தரவரிசைப் பட்டியல்: சாதித்த கோவை கல்வி நிறுவனங்கள்

SCROLL FOR NEXT