முகப்பு
உலகம்

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

ஜேஜு தீவில் வானிலை குறுக்கீடு: 40 விமானங்கள் பாதிப்பு

Updated On : 5 மே, 2024 at 8:57 AM
பகிர்:

தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜேஜு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 20 விமானங்களும் வருகை தரும் 20 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீவுக்குப் பலத்த காற்று வீசும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை முன்னதாகவே தொடர்புகொண்டு தகவல் பெறுமாறு கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரியாவில் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி மழை பெய்து வருவதாகவும் பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் உடன் சில இடங்களில் மழை பெய்து வருவதாகவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.