மாதிரி படம் 
உலகம்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

மெல்போர்னில் இந்திய மாணவர் கொலை - குடும்பம் நடவடிக்கை கோருகிறது

DIN

ஆஸ்திரேலியாவில் முதுகலை தொழில்நுட்பம் பயின்று வந்த 22 வயது இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஹரியாணாவை சேர்ந்த நவ்ஜீத் சந்து என்கிற மாணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்காகச் சென்றுள்ளார். அவர் இறந்தது குறித்த தகவல் நவ்ஜீத்தின் குடும்பத்தாருக்கு ஞாயிற்றுக்கிழமை கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வு மெல்போர்னில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நிகழ்ந்ததாகவும் சில இந்திய மாணவர்களிடையே நடந்த சண்டையை விலக்கிவிடச் சென்ற நவ்ஜீத் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடன் சென்றிருந்த நண்பருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து மாணவரின் உடலைக் கொண்டுவர உதவுமாறு இந்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

நொய்டா: ஜேவா், ரபுபுராவில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கை நிலையங்கள் அமைப்பு

SCROLL FOR NEXT