இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை பார்த்து கதறியழும் பாலஸ்தீன மக்கள்,  காஸாவின் அல் அக்ஸா மருத்துவமனை வளாகம் (படம் | ஏபி)
உலகம்

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் -ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

DIN

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35,000த்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், பாலஸ்தீன மக்களின் புகலிடமாகத் திகழும் காஸாவில் மக்கள்நெருக்கம் அதிகம் நிறைந்த மத்திய ராஃபா பகுதியிலும் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. அந்த நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடந்துவரும் நிலையில், தனது தாக்குதல் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்காக இந்த உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த தனது குழந்தையைப்[ பார்த்து கதறியழும் பாலஸ்தீன தாய்

முதல் கட்டமாக அந்த நகரின் எல்லைப் பகுதிகளிலிருந்து சுமாா் 1 லட்சம் போ் வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் முதலில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மத்தியப் பகுதியிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று ராணுவம் உத்தரவிட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானவா்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனா்.

இந்த நிலையில், காஸாவில் காஸாவில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் அண்டோனியோ குட்டரெஸ்.

குவைத்தில் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனமும்(ஐ.ஐ.சி.ஓ), ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அமைப்பும்(ஓ.சி.ஹச்.ஏ) இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் இன்று(மே. 12) காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசிய ஐ.நா. பொதுச்செயலர் அண்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது, “பிணைக்கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்பட வேண்டும், காஸாவுக்கான நிவாரண உதவிகள் தொடந்ர்து சென்றடைய வேண்டும். காஸாவில் நிகழும் போரால் ” எனக் கூறியுள்ளார்.

”காஸாவில் நிகழும் போரால் மக்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர், மனித உயிர்கள் அழிவைச் சந்திக்கின்றன, குடும்பங்கள் பிளவுபட்டுள்ளன, ஏராளமானன மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர், பசி பட்டினியால் வாடுகின்றனர். போர் நிறுத்தம் என்பது ‘ஆரம்பப் புள்ளி மட்டுமே’, போரால் ஏற்பட்டுள்ள சேதத்திலிருந்து மீண்டெழ நெடுங்காலமாகும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT