காஸா நோக்கி செல்லும் இஸ்ரேலிய டாங்கி ஏபி
உலகம்

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

ராஃபாவில் இஸ்ரேல் ராணுவ ஊடுருவல்!

DIN

ராஃபாவின் உள்புறப் பகுதிகள் வரை இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியுள்ளதாக களத்திலிருந்து பெறப்படுகிற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள் மேற்கு நோக்கி முன்னேறி வருவதாக தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ராஃபாவில் இருந்து வெளியேறும் மக்கள்

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புகலிடம் அடைந்துள்ள ராஃபாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதை அமெரிக்கா கண்டித்துள்ளது.

ராஃபாவின் கிழக்கு எல்லைப்புறத்தில் கடந்த வாரம் இஸ்ரேல் முன்னேற தொடங்கியது முதல் 4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

ராஃபாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளின் வாகனங்களை செவ்வாய்க்கிழமை தங்கள் வீரர்கள் தாக்கியதாக ஹமாஸ் அறிவித்தது. காயமுற்ற ராணுவ வீரர்களை மீட்க அல்-சலாம் பகுதில் மீட்பு ஹெலிகாப்டர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கம்: நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 செவிலியர்களின் உடல்நிலையில் முன்னேற்றம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் செவிலியர் ஜி. சாந்தி

2026-ன் முதல் 15 நாள்களில் மட்டும் தில்லியில் 800 பேர் மாயம்!

சென்னையில் விழா! பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன்!

SCROLL FOR NEXT